Ramesh  Pandit

மருத்துவ ஜோதிடம்

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன. ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும்.

medicalwebpage 1 1024x780

சூரியன் கிரகம் தரும் நோய்கள்

   சூரியனால் பிரச்னை தருவதாக இருந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல்,எலும்புகள் மற்றும் கண் பார்வை, கிட்னியில் கல், எலும்புமஞ்சை நோய், பாதிப்பு போன்றவை உண்டாகும்.

​சந்திரன் கிரகம் தரும் நோய்கள்

   சந்திரனால் பிரச்னை தருவதாக இருந்தால் இதய பிரச்சனை, ரத்தம் நாளங்கள் ,நரம்பு தளர்ச்சி,மனநோய்கள், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

செவ்வாய் கிரகம் தரும் நோய்கள்

   செவ்வாய் பகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கும். ஏனெனில் செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பவர். அதுமட்டுமல்லாமல் இரத்தம் மற்றும் விபத்து சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது.

​புதன் கிரகம் தரும் நோய்கள்

   புதனால் பிரச்னை தருவதாக இருந்தால்  தண்டுவடம், தோள்பட்டை, கால் பாதம், கிட்னியில் கல், யூரினரி இன்ஃபெக்ஷன் சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது

குரு கிரகம் தரும் நோய்கள்

   குருபகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் மாரடைப்பு, குருதிக்கொழப்பு, கல்லீரல் பிரச்சனை சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது

சுக்கிரன் கிரகம் தரும் நோய்கள்

   சுக்கிர பகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் ஹார்மோன்கள் பிரச்னைகள் மற்றும் கண், காது, மூக்கு, தோல் அடைப்பு, சளி பிரச்னை, கண்கள் செக் பண்ண வேண்டி வரும்

சனி கிரகம் தரும் நோய்கள்

   சனிபகவானால்  பிரச்னை தருவதாக இருந்தால் சோர்வு, கால் வலி, சளி, இருமல், உடம்பு பலவீனம், இளைத்து விடும் உடம்பு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனை வரும்.

ராகு மற்றும் கேதுவால் தரும் நோய்கள்

   ராகுபகவானால்  பிரச்னை தருவதாக இருந்தால் மூளை பக்கவாதம், நரம்பு சுருங்கிவிடும், தோல் பிரச்சனை தருபவர் என்று கூறப்படுகிறது. கேது கிரகத்தின் குறைபாடு இருந்தால், அலர்ஜி, விஷத்தால் கண்டம், பயம், கிட்னியில் கல், தருபவர் என்று கூறப்படுகிறது.

சோதிடத்தைப் போலவே மருத்துவமும் அறியப்படாத நிறைய ரகசியங்களை உள்ளடக்கிய விஞ்ஞானம். மிகப்பழைய காலத்திலிருந்தே நோய்களுக்கான காரணத்தையும், காரியத்தையும் தெரிந்துகொள்ளச் சோதிடர்கள் முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியச் சோதிட வல்லுனர்கள் இத்துறையில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலைநாடுகளில் Medical Astrology என்றழைக்கப்படும் மருத்துவம் சம்பந்தப்பட்ட சோதிடம் வளர்ந்துள்ள அளவுக்கு இங்கே வளரவில்லை. இங்கே நோய்களின் பெயர்ப்பட்டியலைவிட நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலங்களின் பெயர்ப்பட்டியல் மிகப் பெரியதாகிவிட்டது கூட இதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.