
The horoscope determines one’s destiny. Astrology is the study of the subtleties of the vast ocean. Each one is guided by the planets according to their horoscope. Calculations are essential to determine benefits the zodiac is the time mirror of human birth. All astrological secrets are common. When looking at their horoscope the benefits may vary depending on the nature of the planet’s house etc. You have to take care of it first.These are the most amazing secrets that highlight the subtleties of the art of astrology and the scientific knowledge of our ancestors. Astrology is considered to be the Jantam Vodanga of the Vedas. Mathematically astrology is divided into three scales. Siddhanta Skandam, Samhita Skandam, and Hora Skandam.Of these Siddhanta Skandam the ideological mass predicts on the basis of addition and subtraction.Samhita Skandam predicts meteorological fields. Hora Skandam describes the impact of the movement of the planets on the Earth and its people. Likewise the role of presents in solving the problems of those who do not have a horoscope is important.Prasanam helps to find the reason for the marriage delay and the suitability of the marriage.
ஜாதகம்தான் ஒருவரின் விதி அமைப்பை நிர்ணயம் செய்யும். ஜோதிட சாஸ்திரம் என்பது விரிந்த பரந்த கடல் ஏகப்பட்ட விஷயங்கள் நுணுக்கங்கள் உள்ளது. ஒவ்வொரு வரையும் அவர்களின் ஜாதக அமைப்பின்படி உள்ள கிரகங்கள்தான் இயக்குகின்றன. பலன்கள் நிர்ணயம் செய்ய கணக்கீடுகள் அவசியம் ராசி சக்கரம் மனிதப் பிறவியின் காலக் கண்ணாடி. ஜோதிட இரகசியங்கள் யாவும் பொதுவானவை ஆகும். தங்கள் ஜாதகத்தைக்கொண்டு பார்க்கும் போது அந்த கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் சாரம் கிரகத்தின பார்வை கிரகத்தின் வீடு முதலியவற்றின் தன்மையைப் பொறுத்துப் பலன்கள் மாறுபடலாம். அதனை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.ஜோதிடக் கலையின் சூட்சமத்தையும் நமது முன்னோர்களின் விஞ்ஞான பூர்வமான அறிவுத் திறமையையும் எடுத்துக் காட்டும் அதி அற்புத இரகசியங்கள் ஆகும். ஜோதிடம் வேதத்தின் ஜந்தாம் வோதங்கமாகக் கருதப்படுகிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம்,சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் கூட்டல், கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது.சம்ஹித ஸ்கந்தம் வானவியல் துறைகள் கணிக்கிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.அதேபோல் ஜாதகம் இல்லாதவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரசன்னங்களின் பங்கு முக்கியமனது.திருமணம் தடை பாட காரணம் மற்றும் திருமணப் பொருத்தம் காண வேண்டும் எனில் அதற்கு பிரசன்னங்கள் உதவுகின்றன.