Services
Twins by Birth
- Face Differ.
- One may be Sutha Jathagam.
- Another will be Dosa Jathagam.
- To predict their Jathagam by seeing their face.
- Possibility of differ in Lagnam for both.
- முகத்தில் சிறு மாறுதல்கள்.
- ஒருவர் சுத்த ஜாதகம்.
- மற்றொருவர் தோச ஜாதகம் வரலாம்.
- இவர்களுடைய ஜாதகத்தை கணிப்பதற்கு முகத்தை நேரில் பார்க்கத் தேவை.
- லக்கனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு
Horoscope & ஜாதகம்

ஜாதகம்தான் ஒருவரின் விதி அமைப்பை நிர்ணயம் செய்யும். ஜோதிட சாஸ்திரம் என்பது விரிந்த பரந்த கடல் ஏகப்பட்ட விஷயங்கள் நுணுக்கங்கள் உள்ளது. ஒவ்வொரு வரையும் அவர்களின் ஜாதக அமைப்பின்படி உள்ள கிரகங்கள்தான் இயக்குகின்றன. பலன்கள் நிர்ணயம் செய்ய கணக்கீடுகள் அவசியம் ராசி சக்கரம் மனிதப் பிறவியின் காலக் கண்ணாடி. ஜோதிட இரகசியங்கள் யாவும் பொதுவானவை ஆகும். தங்கள் ஜாதகத்தைக்கொண்டு பார்க்கும் போது அந்த கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் சாரம் கிரகத்தின பார்வை கிரகத்தின் வீடு முதலியவற்றின் தன்மையைப் பொறுத்துப் பலன்கள் மாறுபடலாம். அதனை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.ஜோதிடக் கலையின் சூட்சமத்தையும் நமது முன்னோர்களின் விஞ்ஞான பூர்வமான அறிவுத் திறமையையும் எடுத்துக் காட்டும் அதி அற்புத இரகசியங்கள் ஆகும். ஜோதிடம் வேதத்தின் ஜந்தாம் வோதங்கமாகக் கருதப்படுகிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம்,சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் கூட்டல், கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது.சம்ஹித ஸ்கந்தம் வானவியல் துறைகள் கணிக்கிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.அதேபோல் ஜாதகம் இல்லாதவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பிரசன்னங்களின் பங்கு முக்கியமனது.திருமணம் தடை பாட காரணம் மற்றும் திருமணப் பொருத்தம் காண வேண்டும் எனில் அதற்கு பிரசன்னங்கள் உதவுகின்றன.
Vastu Shastra
வாஸ்து சாஸ்திரம்

Vastu means truth and name means place of residence. Eliminate the risks of architectural defects caused by the house in a family. Strengthen the prosperous life and establish happiness, protect future generations well, home from everyday problems. Geology – Our earth interacts with us and changes the good and the bad according to the imbalances we have the horoscope will only tell one’s good and bad. The house is not like that, Horoscopes, however, Ridge grooves in the house. Tells everyone in the house about the problems. That means everyone can get the benefit only if they have a horoscope. But with a single home layout we can assess the benefits to everyone in that home. That is Vastu Shastra.The architecture of a house is like glass in which the face of the Lord is visible. If the same glass falls down it will become many pieces. The face of the Lord is visible in each of those pieces. Vastu also depends on every room, every inch, to explore the good and the bad to understand the truth. Living in a house built according to vastu sastra will be prosperous and Happy Life. Can live without any illness Deceases at any moment. No credit harassment, No Court cases. The way to survival will appear. Genealogy occurs.
வாஸ்து என்பதற்கு உண்மை சத்தியம் என்று பெயர் மற்றும் வசிக்கும் இடம் என்று பொருள். ஒரு குடும்பத்தில் வீட்டினால் ஏற்படும் வாஸ்து குறைகளை ஆபத்துக்களை அகற்றவும் வளமான வாழ்க்கையை பலப்படுத்தவும் சந்தோஷத்தை நிலைநிறுத்தவும் ஏற்படுத்தவும், வருங்கால சந்ததிகளை நலமாக, அன்றாட பிரச்சனைகளிலிருந்தும் வீட்டை காக்கும்.மனை இயல் – நம் பூமி நம்முடன் ஒன்றி உறவாடி நல்லது கெட்டதுகளை நாம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மேடு பள்ளங்களுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.ஜாதகம் ஒருவனுடைய நல்லது கெட்டவைகளை மட்டுமே சொல்லும். வீடு அப்படி அல்ல ஜாதகங்கள் எப்படி இருந்தாலும்,விட்டில் உள்ள மேடு பள்ளங்கள், வீட்டில் உள்ள அனைவருக்கும் உள்ள பிரச்சனைகளை சொல்லும். அதாவது ஒவ்வொருவருக்கும் ஜாதகம் இருந்தால் தான் பலன் சொல்ல முடியும். ஆனால் ஒரே வீட்டின் அமைப்பைக் கொண்டு அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் பலன்களை சொல்ல முடியும். அது தான் வாஸ்து சாஸ்திரம். ஒரு வீட்டின் வாஸ்து கண்ணாடியைப் போன்றது.அதில் கர்த்தாவின் முகம் தெரியும். அதே கண்ணாடி கிழே விழந்துவிட்டால் பல துண்டுகளாகிவிடும். அந்த துண்டு ஒவ்வொன்றிலும் கர்த்தாவின் முகம் தெரியும். வாஸ்துவும் ஒவ்வொரு அறைக்கும், ஒவ்வொரு அங்குலத்திற்கும் சார்ந்தது, நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரப்படி கட்டிய வீட்டில் சீரும் சிறப்புமாக இருக்கலாம் .நோய் நொடியின்றி வாழலாம். கடன் தொல்லை, வம்பு வழக்குகள் வராது. பிழைப்பிற்கு வழி தோன்றும் ,வம்ச விருத்தி ஏற்படும்.
Numerology & எண் கணிதம்

Numerology is about how numbers and letters affect human life. This art is very ancient in
our arts. Date of birth number indicates under which dominance you were born.Depending on
the number, of anatomical features the date of birth number one will also indicate eligibility.
The baby is born. It is to live a long life and education, to attain the highest level of life with
comforts. Parents think their child should be appreciated by everyone in the community. With
that in mind, they will name the famous and famous people like forefather (Patton and
Muppaton) who lived happily ever after. Or put the name of their deity. Only English letters
are more valuable in numerology. One number is set to friendly or hostile to another number.
When naming a baby, the mother should choose a name that matches the father’s and mothers
lucky number. Only then will the child be included with the parents and will do the chores of
keeping them. If the base of the numbers wakes up, the base of the letter sounds. Sound
determines language. All movements in the world are based on sound. So the sound
determines the numbers and Letters. The numbers depend on the planets. The planets are
dominating the world.
எண் கணிதம் என்பவை எண்களும் எழுத்துக்களும் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதை பற்றின இக்கலை நம் கலைகளில் மிகப் புராதனமானது பிறந்த தேதி எண் நீங்கள் எந்த ஆதிக்கத்தின் கீழ் பிறந்தவர் என்பதைக் குறிக்கிறது. அந்த எண்ணை அனுசரித்தே சரீர அமைப்பு, குணங்களும் பிறந்த தேதி எண் ஒருவர் தகுதியையும் குறிக்கும்.குழந்தை பிறக்கிறது. அது நீண்ட ஆயுளுடன் கல்வி கற்க வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்து சுக போகங்களுடன் வாழ வேண்டும். சமூகத்தில் அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என்றே பெற்றோர் நினைப்பார்கள். அந்த நினைப்பிலேயே அவர்கள் பெயரும் புகழும் பெற்ற, சுக போகத்துடன் வாழ்ந்த பாட்டன்,முப்பாட்டன் போன்றவர்களின் பெயரைச் சூட்டுவார்கள். அல்லது தம் குலதெய்வத்தின் பெயரை வைப்பார்கள். எண் ஜோதிடத்தில் ஆங்கில எழத்துகளுகே மதிப்பு அதிகம். ஒரு எண் மற்றொரு எண்ணுக்கு நட்பாகவோ வழியாகவோ பகையாகவோ அமைகிறது. குழந்தைக்கு பெயர் சூட்டும் போது தாய் தந்தையின் அதிஷ்ட விதி எண்ணிற்கு நட்பு எண் வரும் வண்ணம் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தை பொற்றோருக்கு அடங்கியிருப்பதுடன் அவர்களை வைத்து காப்பாற்றும் பணிவிடைகள் செய்யும். எண்களின் அடிப்படை எழுந்து என்றால், எழத்தின் அடிப்படை சப்தம். சப்தம் தான் மொழியை நிர்ணயம் செய்கின்றது. உலகின் அனைத்து இயக்கங்களுமே சப்தத்தின் அடிப்படையில் தான் உள்ளது. எனவே சப்தத்தை எழத்து எண்களை நிர்ணயிக்கின்றது. எண்கள் கிரகங்கள் சார்ந்துள்ளது. கிரகங்களோ உலகை ஆட்டிப் படைக்கின்றது.
Medical Astrology & மருத்துவ ஜோதிடம்

The 6th house is the place of debt disease for Janma Lagna in the Zen horoscope. This is a place where you can learn about diseases and health. Diseases are caused by the structure of the planets that form in it. Diseases can occur even if the planets are weak in the 8th house which is the place of life and health for Janma Lagna and the planets are weak with the 8th lord.
Sun Planets and Diseases
If the problem is caused by the sun, heat-related illnesses, such as the flu Bones and eye sight, kidney stone, Bone marrow disease etc can occur.
Moon Planets and Diseases
If the moon causes problems, heart problems, blood vessels, neurasthenia, mental illness, mental problems are likely to occur.
Mars Planets and Diseases
Blood related problems may require surgery if Mars is causing problems. Because Mars represents blood. It also causes blood and accident related problems.
Mercury Planet and Diseases
Mercury can cause problems with the spine, shoulders, ankles, kidney stones, and urinary tract infections.
Jupiter Planets and Diseases
If heartburn is a problem then heart attack and hemorrhoids are liver problems.
Venus Planet Disease
If Venus is the cause of the problem then hormonal problems and eye, ear, nose, skin blockage, mucus problem, eyes will have to be checked.
Saturn Planets and Diseases
Fatigue, leg pain, colds, coughs, malaise, nervousness and nervous problems can occur if the cold is causing problems.
Rahu Ketu Planets and Disease
Raghu Bhagavan is said to be the cause of brain stroke, nerve contraction and skin problem if it is the cause of the problem. If there is a deficiency of the planet Ketu, allergy, poisoning the continent, fear, kidney stone, is said to be the giver.
Like astrology, medicine is a science that contains many unknown secrets. Astrologers have long sought to determine the cause and effect of disease. But Indian astrologers were not so interested in the field. Medical astrology, also known as medical astrology in the highlands, did not develop here to a great extent. This may be due to the fact that the list of
Parikara Sthalangal as (Temples) directed by these who knows a little knowledge about Medical Astrology are on the increasing tendency to divert the people may be the cause for the under development of Medical Astrology in our country.
ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன. ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும்.
சூரியன் கிரகம் தரும் நோய்கள்
சூரியனால் பிரச்னை தருவதாக இருந்தால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல்,எலும்புகள் மற்றும் கண் பார்வை, கிட்னியில் கல், எலும்புமஞ்சை நோய், பாதிப்பு போன்றவை உண்டாகும்.
சந்திரன் கிரகம் தரும் நோய்கள்
சந்திரனால் பிரச்னை தருவதாக இருந்தால் இதய பிரச்சனை, ரத்தம் நாளங்கள் ,நரம்பு தளர்ச்சி,மனநோய்கள், மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
செவ்வாய் கிரகம் தரும் நோய்கள்
செவ்வாய் பகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கும். ஏனெனில் செவ்வாய் ரத்தத்தைக் குறிப்பவர். அதுமட்டுமல்லாமல் இரத்தம் மற்றும் விபத்து சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது.
புதன் கிரகம் தரும் நோய்கள்
புதனால் பிரச்னை தருவதாக இருந்தால் தண்டுவடம், தோள்பட்டை, கால் பாதம், கிட்னியில் கல், யூரினரி இன்ஃபெக்ஷன் சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது
குரு கிரகம் தரும் நோய்கள்
குருபகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் மாரடைப்பு, குருதிக்கொழப்பு, கல்லீரல் பிரச்சனை சார்ந்த பிரச்சினைகளைத் தருகிறது
சுக்கிரன் கிரகம் தரும் நோய்கள்
சுக்கிர பகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் ஹார்மோன்கள் பிரச்னைகள் மற்றும் கண், காது, மூக்கு, தோல் அடைப்பு, சளி பிரச்னை, கண்கள் செக் பண்ண வேண்டி வரும்.
சனி கிரகம் தரும் நோய்கள்
சனிபகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் சோர்வு, கால் வலி, சளி, இருமல், உடம்பு பலவீனம், இளைத்து விடும் உடம்பு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனை வரும்.
ராகு மற்றும் கேதுவால் தரும் நோய்கள்
ராகுபகவானால் பிரச்னை தருவதாக இருந்தால் மூளை பக்கவாதம், நரம்பு சுருங்கிவிடும், தோல் பிரச்சனை தருபவர் என்று கூறப்படுகிறது. கேது கிரகத்தின் குறைபாடு இருந்தால், அலர்ஜி, விஷத்தால் கண்டம், பயம், கிட்னியில் கல், தருபவர் என்று கூறப்படுகிறது.
சோதிடத்தைப் போலவே மருத்துவமும் அறியப்படாத நிறைய ரகசியங்களை உள்ளடக்கிய விஞ்ஞானம். மிகப்பழைய காலத்திலிருந்தே நோய்களுக்கான காரணத்தையும், காரியத்தையும் தெரிந்துகொள்ளச் சோதிடர்கள் முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியச் சோதிட வல்லுனர்கள் இத்துறையில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலைநாடுகளில் Medical Astrology என்றழைக்கப்படும் மருத்துவம் சம்பந்தப்பட்ட சோதிடம் வளர்ந்துள்ள அளவுக்கு இங்கே வளரவில்லை. இங்கே நோய்களின் பெயர்ப்பட்டியலைவிட நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலங்களின் பெயர்ப்பட்டியல் மிகப் பெரியதாகிவிட்டது கூட இதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.
Palmistry & கைரேகை

Although the combination of horoscopes and fingerprints is a comparative study, it also combines astrological nuances. Outcomes are determined as soon as a person is born.Although the horoscopes are not calculated, the effects are recorded by the Lord in the palm of the hand by the human mind. Fingerprinting makes a man understand many things. His characteristics dictate the status of the spouse from whom the family influences at birth and future lifestyles have come. The lines on the hands tell the future. When we look at our palms many lines are seen crosswise. There are many different types of hands. It is impossible for one to be like the other. There will definitely be a small variation. Thus while there are many different types of hands there are mainly seven types of systems that are somewhat mixed. Benefits should be determined by the structure of the fingers and the position of the ridges and the linearity. Some symbols can be found on the mounds. They also have benefits. Only by knowing those codes first will it be convenient to determine the benefits. There are squares, dots, zigzags, loops, star, braid, trident, broken lines, cone, wheel, crutch, veil, lines. Thus the reason for the change in the lines is the connection between the brain and the fingerprints.
ஜாதகமும் கைரேகையும் இணைந்து ஒப்பு நோக்குதல் ஆய்வு என்றாலும் ஆங்காங்கே ஜோதிட நுணுக்கங்களை இணைத்துவரும். ஒரு பிறவி பிறந்தவுடனே பலாபலன்களை நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. ஜாதக கணக்கீடுகள் போடவில்லை என்றாலும் அந்தப் பலாபலன்கள் இறைவனால் மனித மனதின் மூலமாக உள்ளங்கைகளில் ரேகைகளாக பதியச் செய்து விடுகின்றது.கைரேகை ஒரு மனிதன் பல விஷயங்களை விளங்க வைக்கின்றது அவனின் குணாதிசயங்கள் பிறந்த குடும்பம் செல்வாக்கு எதிர்கால வாழ்க்கை முறைகள் வந்துள்ள துணைவியின் நிலைமை கூறுகின்றன. கைகளில் உள்ள கோடுகள் எதிர்காலத்தை கூறுகின்றது.நம்முடைய உள்ளங்கைகளைப் பார்க்கும் போது பல கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக காணப்படுகின்றது.கைகளில் பலவிதமான கைகள் உள்ளன. ஒன்று போல மற்றொன்று இருப்பது என்பது இயலாது. சிறு மாற்றமேனும் நிச்சயம் காணப்படும் இவ்விதம் பல வகையான கைகள் இருந்த போதும் முக்கியமாக ஏழ விதமான அமைப்புகளையும் சற்றே கலந்தவாறே இருக்கும் விரல்களின் அமைப்பையும் மேடுகளின் நிலைகள் ரேகைகளகன் தன்மை ஆகிய அனைத்தும் கொண்டே பலன்களை நிர்ணயிக்க வேண்டும். மேடுகளில் சில குறியீடுகள் காணப்படும். அவற்றிற்கும் பலன்கள் உண்டு. முதலில் அந்த குறியீடுகளைப் பற்றி தெரிந்து கொண்டால் தான் பலன்களை நிர்ணயம் செய்ய வசதியாக இருக்கும். சதுரங்கள், புள்ளிகள், தீவுக்குறிகள், உடுக்கை, நட்சத்திரம்,பின்னல்,திரிசூலம், உடைந்த ரேகைகள், சங்கு,சக்கரம், பிறை,வேல்,ரேகை ள் உண்டு. இவ்வாறு ரேகைகள் மாற்றம் அடைவதற்கு காரணம் மூளைக்கும் கைரேகைக்கும் உள்ள தொடர்புதான்.
Auspicious date for Caesarean
சிசேரியனுக்கு உகந்த நாட்கள்

According to astrology, if the birth of a child is a Natural birth, the result will be 100% accurate when predicting the time when the child born. People can benefit from using astrologically good times in a situation where there is a problem in childbirth, physical weakness, or both are life threatening. Most planets cannot change the zodiac sign of Guru, Saturn and Rahu, Ketu no matter what the date and time is for Caesarean. It is possible for those with selective wisdom and experience in astrology can find out when the baby is actually born. That too is not to conclude that this is what happens after children are born and grow up so that they can discover its nature and experimental achievements as they live and grow. The position of life is the sign in which we are born in the horoscope. Lagnam is the place where our character represents functions, self-confidence, and function. Each sign represents a famine character. Caesarean section has not started now and has taken place during the time of the Chola kings. A pregnant woman should be physically and mentally ready to have a normal delivery during pregnancy. The planets are not always in good positions in the sky. Even to do a cesarean they are currently set to give yogam only once in a while.
ஜோதிட கருத்துப்படி ஒரு குழந்தை ஜனைம் என்பது சுகப்பிரசவம் ஆக இருப்பின் குழந்தை பிறக்கக் கூடிய அந்த நேரம் கணிக்க போது பலன் 100% சரியாக இருக்கும், பிரசவத்தில் சிக்கல், உடல் பலவீனம், இருவருக்கும் உயிருக்கு ஆபத்து என்று இக்கட்டான நிலையில் ஜோதிட ரீதியாக நல்ல நேரம் பயன்படுத்தி நன்மக்களைப் பெறலாம்.என்னதான் சிசேரியனுக்கு நாள் குறித்தாலும் பெரும்பாலான கிரகங்கள் குருவும், சனியும், ராகு கேது இருக்கும் ராசியை மாற்ற முடியாது. சிசுவுனுடைய உண்மையான பிறப்பு காலம் எப்போது என்று கண்டுபிடிப்பது ஜோதிடத்தில் தேர்ந்த ஞானமும் அனுபவம் உள்ளவர்களுக்கு சாத்தியமானது அதுவும் குழந்தைகள் பிறந்த வளர்ந்து வாழ்க்கை நடத்துகிற போது அதன் இயல்புகளையும் சோதனை சாதனைகளை அவர்கள் கண்டுபிடிக்க முடியும் என்பதற்காகவே பிறந்து வளர்ந்த பிறகு இதுதான் என்று தீர்மானிப்பற்கு அல்ல.ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம் நம் குணத்தை செயல்பாடுகளை,தன்னம்பிக்கையை, செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம் ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.சிசேரியன் தற்போது ஆரம்பித்த பழக்கம் இல்லை சோழ மன்னர்கள் காலத்தில் நடந்திருக்கிறது.கர்ப்ப காலத்தின் ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.வானில் எல்லா நேரங்களிலும் கிரகங்கள் நல்ல நிலைமைகளில் இருப்பதில்லை. சிசேரியன் செய்ய கூட எப்போதோ ஒருமுறை மட்டுமே யோகம் தரும் நிலையில் தற்போது அமைகின்றன.

Twins By Birth
இரட்டையர் பிறப்பில்
Minor changes in the face. One can come from Sudha Jathakam and the other from Dosha jathakam.Their prediction requires looking at the face in person (or) through a photograph. Lagnam are subject to change. The art of knowing a person’s character, a particular relationship between appearances by the features of his face. Small changes in the face in astrology at the birth of twins vary in virtues. Lagnam will definitely vary. When the marriage is fixed these contradictions are added to many good mergers and the correct way to get rid of the marital problems can be assessed through Lagnam.A person’s condition can be traced to various functions and intelligence of his type gestures and facial expressions, facial features general characteristics of its shape and certain types of characteristics. The main types of faces are the following shapes. They are oval face with the forehead slightly wider than the chin line, the face touching the eye. Round face means cheeks are very wide, low forehead, height equal to its width. The elliptical face is the upper forehead flattened cheekbones and elongated chin. The square face is the lower forehead with a flattened chin. The triangular (a) heart face is the forehead and cheekbones, with a narrow chin. Minor changes will come from one Sudha jathakam and another Dosha jathakam.
முகத்தில் சிறு மாறுதல்கள் ஒருவர் சுத்த ஜாதகம், மற்றொருவர் தோஷ ஜாதகம் வரலாம். இவர்களுடைய கணிப்பதற்கு முகத்தை நேரில் (அல்லது) புகைப்படம் மூலமாக பார்க்கத் தேவை. லக்கணம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு நபரின் தன்மை, அவரது முகத்தின் அம்சங்களால் தோற்றம் இடையேயான, ஒரு குறிப்பிட்ட தொடர்பை அறிந்து கொள்ளும் கலை.இரட்டையர் பிறப்பில் ஜோதிடத்தில் முகத்தில் சிறு மாறுதல்கள் நற்குணங்கள் மாறுபடும் இலக்கணங்கள் கண்டிப்பாக மாறுபடும்.திருமணம் பொருத்தம் அமையும் போது இந்த முரண்பாடுகள் பல நல்ல இணைவுகள் சேர்க்கப்பட்டு மணவாழ்க்கை பிரச்சினை களைந்து சரியான வழிமுறையை இலக்கணத்தில் மூலம் அறியலாம். ஒரு நபரின் நிலை அவரது உருவம் சைகைகள் மற்றும் முகபாவங்கள் , முக அம்சங்கள் அதன் வடிவம் பொதுவான வெளிப்பாடு சில வகை குணாதிசயங்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் நுண்ணறிவு அறியலாம். முகங்களின் முக்கிய வகைகளில் பின்வரும் வடிவங்கள் உள்ளன. அவை ஓவல் முகம் என்பவை நெற்றிக் கோடு தாடைக் கோட்டிற் சற்று அகலமாக,முகம் கண்ணத்தில் தட்டுகிறது.வட்ட முகம் என்பவை கன்னங்கள் மிகவும் அகலம், குறைந்த நெற்றி,உயரம் அதன் அகலத்திற்கு சமமாக இருக்கும். நீள் வட்ட முகம் என்பவை உயர்ந்த நெற்றி தட்டையான கன்னத்து எலும்புகள் மற்றும் நீளமான கன்னம். சதுர முகம் என்பவை குறைந்த நெற்றி தட்டையான கன்னம் கொண்டிருக்கும். முக்கோண (அ) இதயம் முகம் என்பவை நெற்றி மற்றும் கன்னத்து எலும்பு , குறுகிய கன்னம் உடையவர்.சிறு மாறுதல்கள் ஒருவர் சுத்த ஜாதகம் மற்றொருவர் தோஷ ஜாதகம் வரும்

Marriage Compatibility
திருமண பொருத்தம்

There is a lot of disagreement and a lot of contradictions in looking at marriage compatibility as an integral part of the astrological subject. This conflict avoids many good marriages and with the addition of irrelevant mergers the marital problem, one can figure out the right way to get rid of these conflicts. How is the field sin in the horoscope.
They need to measure the foundation of their lives. Once you see the disadvantages, you need to find out if there is an alternative. We can see how the sin of a Bride causes wonders and strangeness in human life. You can learn how some life is a pleasure oasis, some life is a desert, and some life is like a boat caught in a hurricane. The opposite sin is given to Lagnam only in the sense that life partner is paramount. The living person understands the importance of the life partner from the fact that the life partner has given the opposite sin to the sin of life. There are three systems called fate, wisdom and destiny. Rule refers to the sign. If the sign of fate is not correct, then the noon sign should be observed. Wisdom refers to the feature. If the aspect is good then their destiny will be good.
ஜோதிட விஷயத்தின் ஒரு அங்கமான திருமணப்பொருத்தம் பார்ப்பது என்பதில் அதிகமான கருத்து வேறுபாடு உள்ளதுடன் முரண்பாடுகளும் அதிகமாக உள்ளது. இந்த முரண்பாடு பல நல்ல இணைவுகள் தவிர்க்கப்படுகின்றன என்பதுடன் பொருத்தமற்ற இணைவுகள் சேர்க்கப்பட்டு மணவாழ்க்கை பிரச்சனை, இந்த முரண்பாடுகளை களைந்து சரியான வழிமுறையை அறியலாம்.ஜாதகத்தில் களத்திர பாவம் எவ்வாறு உள்ளது. இவர்கள் இல்வாழ்க்கையின் அடித்தளம் எவ்வாறு உள்ளது என்று அளவிட வேண்டும். தீமைகளைக் கண்டவுடன் அதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என்று ஆரய வேண்டும். களத்திர பாவம் எவ்வாறு மனித வாழ்வில் விந்தைகளையும் , விசித்திரங்களையும் விளைவிக்கின்றது என்பதை காணலாம். சிலர் வாழ்வு இன்பச் சோலையாகவும், சிலர் வாழ்க்கை பாலைவனமாகவும், சிலர் வாழ்வு சூறாவளியில் அகப்பட்ட படகுபோல் தத்தளிக்கும் நிலையும் எப்படி என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியும். வாழ்க்கைத் துணை அதிமுக்கியம் என்ற கருத்தில் தான் லக்னத்துக்கு நேர் எதிர் பாவம் அளிக்கப்பட்டுள்ளது.உயிருள்ளவரை தனக்கு ஒரு துணை தேவை என்பதில் வாழ்க்கைத் துணைக்கு உயிர் பாவத்துக்கு நேரேதிரில் உள்ள பாவத்தை கொடுத்துள்ளதில் இருந்து வாழ்க்கைத் துணைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பது புரியும். விதி, மதி, கதி என்று மூன்று அமைப்பு உள்ளது. விதி என்பது லக்கணத்தை குறிப்பது. விதி என்னும் லக்கினம் சரியாக இல்லாதபட்சத்தில் மதியாகிய ராசியைக் கவனிக்க வேண்டும். கதி என்பது அம்சத்தை குறிப்பது.அம்ஸத்தில் நன்றாக இருந்தால் அவர்கள் கதி நன்றாக அமையும்.
Second Marriage of Bridegroom & Bride with Children
குழந்தைகளுடன் மணமகன் மற்றும் மணமகளின் இரண்டாவது திருமணம்

Tara Dhosha occurs in this world with the karmic reactions that we did in the previous life. Dhosha planets should not stand in the family position and domain position in general. For horoscopes with Tara Dhosha, there will be obstacles and delays in marriage. Married people will disagree with their spouse for no reason. In this situation in the present era marital breakdown has become a normal one. Statistics show that the number of remarriages is increasing year by year. Divorced people who get married after looking at ten matches get divorced this matching method is a method of predicting the male and female genitalia. I.e. the number that counts from the female star to the male star the mistake that can easily get your claim is liable to fail. Nine matches would be a good fit to look at, but still lamenting why life goes on like this, even if you stand upside down you will not find the answer to it. Appropriately, if a woman’s horoscope has a planetary system that gives her difficulty, then the horoscope of the man she marries has a yogam system. If there is a planetary system that gives difficulty in the male horoscope then the horoscope of the woman must also have a yoga system. If married like this will be happier. So it is not a mistake to look at the horoscope twice during marriage. Zodiac, not just looking for a match with the star, Knowing the planetary position of Sun, Moon, Mars, Jupiter, Saturn, Venus, Mercury in both the planets, the planetary benefits and knowing the Dasa mind for both of them is the perfect marriage match. Another reason is that most parents do not choose a groom who is right for their children in character but expects him or her to be a groom who is worthy of his or her status. With being married, many parents decide to get marriage only after looking at the horoscope of the bride and saying that the marriage is suitable for both of them. To be like that sometimes it is better to just look at the star match and get married or not to examine exactly the bridal horoscope. If the astrologer says so, then it is not the astrologer who is going to suffer but the couple who got married. The number of people remarrying for various reasons on increasing trend the first marriage has departed from life. If this is a healthy social change, it is important to be very careful in a second marriage. He will take care of the child coming through the second wife or the child coming through the husband i.e. one’s child ,as the Childhood position explores the position of the pantry and uses it as a marriage to raise her child better. Otherwise the mind that the child will have to face problems again.
தார தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுகிறது. பொதுவாக குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்க கூடாது. தார தோஷம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபாடு ஏற்படும். இந்த சூழ்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் திருமண முறிவு என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் முடித்தவர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர். இந்த பொருத்தம் பார்க்கும் முறை என்பது ஆண், பெண் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு கணிக்கும் முறை. அதாவது பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு அதனை வைத்து பொருத்தம் பார்த்துச் சொல்வார்கள் தவறு என்பது இங்கே உருவாகிறது. அப்படி பொருத்தம் பார்த்து ஒன்பது பொருத்தம் நன்றாக இருக்கே, அப்படி இருந்தும் ஏன் இப்படி பிரச்னையா வாழ்க்கை போகிறதென்று புலம்பினால், தலைகீழாக நின்றாலும் அதற்கான விடை காண இயலாது. பொருத்தம் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவள் மணம்புரியும் ஆணின் ஜாதகம் யோக அமைப்புள்ளதாகவும், ஆண் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவர் மணம் புரியும் பெண்ணின் ஜாதகம் யோக அமைப்பு உடையதாகவும் இருக்க வேண்டும்.இதுபோன்று திருமணம் செய்தால், இருவர் வாழ்க்கையும் சந்தோஷமானதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தின் போது ஒன்றுக்கு இரண்டு முறை ஜாதக பொருத்தத்தைப் பார்த்தாலும் அது தவறில்லை.ராசி, நட்சத்திரத்தை வைத்து மட்டும் பொருத்தத்தைப் பார்க்காமல், இருவருக்கும் உள்ள சூரியன்,சந்திரன், செவ்வாய், குரு, சனி, சுக்கிரன், புதன் கிரகங்களின் கிரக நிலை, கிரக பலன்களை அறிந்து, இருவருக்குமான திசா புத்தியை அறிந்து திருமண பொருத்தம் பார்ப்பது தான் சரியான திருமண பொருத்தமாகும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பண்பிலும் குணத்திலும் ஏற்ற வரனை தேர்வு செய்யாமல் தன் அந்தஸ்திற்கேற்ற வரனாவும், தனது பேச்சைக் கேட்க கூடிய வரனாகவும் அமைய வேண்டும் என எதிர்பார்ப்பதும் மற்றொரு காரணமாகும்.திருமணமான என்ற உடன், மணமக்களின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து இருவருக்கும் ஏற்ற திருமணம் பொருத்தம் என சொன்ன பின்னரே பல பெற்றோர்கள் திருமணத்தை நிச்சயிக்கின்றனர். அப்படி இருக்க சில நேரங்களில் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வதாலோ அல்லது சரியாக மணமக்களின் ஜாதக கட்டத்தில் ஆராயமல் பொருத்தம் நன்றாக இருக்கிறது. என ஜோதிடர் சொன்னால், அதனால் பலன் அடையப் போவது ஜோதிடர் அல்ல திருமணத்தை செய்து கொண்ட அந்த தம்பதியர் தான்.முதல் திருமணம் வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம் தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இரண்டாம் மனைவியின் மூலம் வரும் குழந்தையை அல்லது கணவன் மூலம் வரும் குழந்தை அதாவது ஒருவருடைய குழந்தையை அன்னியோன்யமாக பார்த்துக்கொள்வார். என புத்திர ஸ்தானம் அலசி ஆராய்ந்து திருமணம் செய்தால் தன் குழந்தையாக பாவித்து சிறப்பாக வளர்ப்பர். இல்லையெனில் குழந்தையினால் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் மனம் ஒத்துப் போகாது.
For Consultation Call now (+91) 9444356769
Palmistry