There is a lot of disagreement and a lot of contradictions in looking at marriage compatibility as an integral part of the astrological subject. This conflict avoids many good marriages and with the addition of irrelevant mergers the marital problem, one can figure out the right way to get rid of these conflicts. How is the field sin in the horoscope.
They need to measure the foundation of their lives. Once you see the disadvantages, you need to find out if there is an alternative. We can see how the sin of a Bride causes wonders and strangeness in human life. You can learn how some life is a pleasure oasis, some life is a desert, and some life is like a boat caught in a hurricane. The opposite sin is given to Lagnam only in the sense that life partner is paramount. The living person understands the importance of the life partner from the fact that the life partner has given the opposite sin to the sin of life. There are three systems called fate, wisdom and destiny. Rule refers to the sign. If the sign of fate is not correct, then the noon sign should be observed. Wisdom refers to the feature. If the aspect is good then their destiny will be good.
ஜோதிட விஷயத்தின் ஒரு அங்கமான திருமணப்பொருத்தம் பார்ப்பது என்பதில் அதிகமான கருத்து வேறுபாடு உள்ளதுடன் முரண்பாடுகளும் அதிகமாக உள்ளது. இந்த முரண்பாடு பல நல்ல இணைவுகள் தவிர்க்கப்படுகின்றன என்பதுடன் பொருத்தமற்ற இணைவுகள் சேர்க்கப்பட்டு மணவாழ்க்கை பிரச்சனை, இந்த முரண்பாடுகளை களைந்து சரியான வழிமுறையை அறியலாம்.ஜாதகத்தில் களத்திர பாவம் எவ்வாறு உள்ளது. இவர்கள் இல்வாழ்க்கையின் அடித்தளம் எவ்வாறு உள்ளது என்று அளவிட வேண்டும். தீமைகளைக் கண்டவுடன் அதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என்று ஆரய வேண்டும். களத்திர பாவம் எவ்வாறு மனித வாழ்வில் விந்தைகளையும் , விசித்திரங்களையும் விளைவிக்கின்றது என்பதை காணலாம். சிலர் வாழ்வு இன்பச் சோலையாகவும், சிலர் வாழ்க்கை பாலைவனமாகவும், சிலர் வாழ்வு சூறாவளியில் அகப்பட்ட படகுபோல் தத்தளிக்கும் நிலையும் எப்படி என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியும். வாழ்க்கைத் துணை அதிமுக்கியம் என்ற கருத்தில் தான் லக்னத்துக்கு நேர் எதிர் பாவம் அளிக்கப்பட்டுள்ளது.உயிருள்ளவரை தனக்கு ஒரு துணை தேவை என்பதில் வாழ்க்கைத் துணைக்கு உயிர் பாவத்துக்கு நேரேதிரில் உள்ள பாவத்தை கொடுத்துள்ளதில் இருந்து வாழ்க்கைத் துணைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பது புரியும். விதி, மதி, கதி என்று மூன்று அமைப்பு உள்ளது. விதி என்பது லக்கணத்தை குறிப்பது. விதி என்னும் லக்கினம் சரியாக இல்லாதபட்சத்தில் மதியாகிய ராசியைக் கவனிக்க வேண்டும். கதி என்பது அம்சத்தை குறிப்பது.அம்ஸத்தில் நன்றாக இருந்தால் அவர்கள் கதி நன்றாக அமையும்.